உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : பி.வி.சிந்து திடீர் விலகல்; ஏனென்றால்..
Sun, 14 Aug 2022

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில், முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பி.ஏ.ஐ. எனப்படும் இந்திய பேட்மிண்டன் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பி.வி.சிந்துவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*