உலக கோப்பை கிரிக்கெட் : ஹாட்ரிக் விக்கெட் எடுத்து, ஜோஷ் லிட்டில் சாதனை..

josh

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

19-வது ஓவரில் வில்லியம்சன் (61 ரன்) நீசம் (0), சான்ட்னெர் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இது இந்த உலக கோப்பையில் இரண்டாவது ஹாட்ரிக் ஆகும்.

ஏற்கனவே முதல் சுற்றில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுழற்பந்து வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 2-வது அயர்லாந்து வீரர் ஜோஷ் லிட்டில் ஆவார்.
 

Share this story