ஒரு உண்மையான சவால் தொடங்குகிறது : டெல்லி அணி கோச்சர் ரிக்கி பாண்டிங் 

A real challenge begins Delhi team coach Ricky Ponting

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக, முதல் தகுதிச் சுற்றில் மோதும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது :

கடைசி லீக் ஆட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்த விதம் சற்று ஏமாற்றம் அளித்தது. ஆனாலும், நான் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. 

ஏனென்றால், அது நல்ல வி‌ஷயமென்று நான் நினைக்கிறேன்.

அந்த தோல்வி, இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாட்டை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று டெல்லி அணி வீரர்கள் சிந்திக்க ஒரு வாய்ப்பு அளிக்கும். 

தோல்வியை மறந்துவிட்டு, அடுத்த போட்டியில் கவனத்தை செலுத்த தொடங்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை பார்த்தால், நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல், மும்பைக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ஆனாலும், அப்போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றோம். 

அந்த ஆட்டங்களை விட, இன்று நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். அதை நான் நிச்சயமாக எதிர்பார்க்கிறேன். லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாங்கள் 2 முறை வீழ்த்தி இருக்கிறோம்.

இதனால், நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஆனால், பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் முற்றிலும் வேறுபட்டவை. எனவே எங்களுக்கான சவால் இப்போதுதான் தொடங்குகிறது.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், நாங்கள் சரியான மனநிலையில் இருப்பதை உறுதி செய்கிறோம். சென்னை அணியும் பலம் வாய்ந்ததாகும். 

அவர்கள் போட்டி முழுவதும் புள்ளிகள் பட்டியலில் எங்களோடு சமநிலையாக இருந்தனர்.ஆகையால், நாங்கள் மதிக்கிறோம்' என்றார்.
*

Share this story