சேப்பாக் மைதானத்தில் அனுமதி இலவசம் : டோனியின் ஆட்டம் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி..

ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் வரும் 31-ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இதைத் தொடர்ந்து சென்னை அணிக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3 -ம் தேதி நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை முடிவடைந்தது.
இந்நிலையில் சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனை காண ரசிகர்களுக்கு கட்டணம் தேவை இல்லை என நிர்வாகம் அறிவித்தது. மேலும் மைதானத்தில் சி, டி மற்றும் இ ஆகிய மூன்று கேலரிகளுக்கு மட்டும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் சேப்பாக்கம் நோக்கி படையெடுத்தனர். டோனியின் பயிற்சியை கண்டு மகிழ்ந்தனர்.