24 ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கதேச கிரிக்கெட் அணி புதிய சாதனை..

வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான 17ஆவது லீக் போட்டி தற்போது புனேயில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
அதன்படி வங்கதேச அணியில், தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஒவ்வொரு ரன்னாக அடிக்கத் தொடங்கினர். முதல் ஓவரில் ஒரு ரன்னும், 2ஆவது ஓவரில் 4 ரன்னும், 3ஆவது ஓவரில் மெய்டன், 4ஆவது ஓவரில் 1 ரன்னும், 5ஆவது ஓவரில் 4 ரன்னும், 6ஆவது ஓவரில் 9 ரன் என்று மொத்தமாக 6 ஓவர்களில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது.
அடுத்த 4 ஓவர்களுக்கு வங்கதேச அணியானது, 44 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலமாக முதல் 10 ஓவர்களுக்கு வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய லிட்டன் தாஸ் மற்றும் தன்ஷித் ஹசன் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் குவித்தனர். இதில், தன்ஷித் அகமது 41 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஒரு நாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார். மேலும், அவர் 43 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் குவித்ததன் மூலமாக வங்கதேச அணி பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 62 ரன்கள் எடுத்ததே அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக இருந்துள்ளது. தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு 93 ரனள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
மேலும், இந்தியாவிற்கு எதிராக வங்கதேச அணி வீரர்கள் எடுத்த பார்ட்னர்ஷிப் ரன்கள்:
120 – லிட்டன் தாஸ், மெஹிடி ஹசன் மிராஸ், துபாய், 2018
102 – சவுமியா சர்கார், தமீம் இக்பால், மிர்பூர், 2015
93 – லிட்டன் தாஸ், தன்ஷித் ஹசன், புனே, 2023
80 - இம்ருல் கயஸ், தமீம் இக்பால், மிர்பூர், 2010