மேலும், முன்னேற்றுவேன் : இந்திய அணியின் புதிய கோச்சர் டிராவிட்
 

Also, I will improve The new coach of the Indian team is Dravid


இந்திய கிரிக்கெட் அணியின் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையுடன் ரவி சாஸ்திரியின் பதவிக்கலாம் முடிவடைகிறது. 

இதனால், புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பத்தை வெளியிட்டு, விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்து அனுப்பலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். அவரைத் தவிர, யாரும் விண்ணப்பம் செய்தாத நிலையில், தற்போது ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனம் குறித்து, ராகுல் டிராவிட் கூறியதாவது :

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது, மிகப்பெரிய கவுரவம். அந்த பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். 

ரவி சாஸ்திரியின் தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. 

அணியுடன் பணிபுரிந்து முன்னோக்கி எடுத்துக் செல்வேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

Share this story