ஆஷஸ் டெஸ்ட் : 275 ரன்ல ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி : ஆடுகள விவரம்..

Ashes Test Australia win by 275 runs Pitch details ..

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர், கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலியா  அணி இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 16-ம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தொடங்கிய 2-வது போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி,  முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

விக்கெட்டுகள் இழப்பு :

தொடர்ந்து ஆடிய இங்கிலந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதைத் தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து 468 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

முன்னிலை :

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், 2-0 என்ற  கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

Share this story