ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : பும்ரா மிஸ்ஸிங்..

By 
pumra44

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பை போட்டியில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளாம் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்தது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது லீக் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. நேற்று நடந்த 4-வது போட்டியில் வங்காளதேசம் 89 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 5-வது லீக் ஆட்டம் இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா நேபாளத்துக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவருடைய மனைவிக்கு குழந்தை பிறப்பதையொட்டி அவர் நேற்று நாடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் அவர் நாடு திரும்பினார்.

இந்நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார். காயம் காரணமாக பும்ரா கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாடினார்.

அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றினார். இதற்கிடையே ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கொழும்பில் நடைபெற இருக்கும் ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூப்பர் 4 சுற்றில் 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி அங்கு நடக்கிறது.

கொழும்பில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நடைபெற இருக்கும். போட்டிகள் தமுல்லா அல்லது ஹம்பன் டோடாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து நாளை இறுதி முடிவு செய்யப்படுகிறது.ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட்: நேபாளத்துக்கு எதிராக பும்ரா ஆடவில்லை.


 

Share this story