ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

By 
tila

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்.17 வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் தேர்வுக் குழு அஜித் அகர்கர், தேர்வுக் குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார்.

ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். வழக்கம் போல சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை.

ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள் விவரம்:-

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ்.பிரதிஷ் கிருஷ்ணா. ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன் இதே அணி தான் உலககோப்பைத் தொடருக்கும் பயணம் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

 

Share this story