ஆசிய விளையாட்டு போட்டிகள் : குதிரையேற்றம் தனிநபர் பிரிவில், இதோ ஒரு வரலாற்று சாதனை

By 
horse

* 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 6-வது நாளாக இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 6 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

* ஆசிய விளையாட்டு: ஆடவர் இரட்டையர் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் தென் கொரியாவின் சியோங்சான் ஹாங் மற்றும் சூன்வூ குவான் ஜோடியை இந்தியாவின் சாகேத் மைனேனி மற்றும் ராமநாதன் ராம்குமார் ஜோடி எதிர்த்து விளையாடியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6-1, 6-7(6), 10-0 என்ற செட் கணக்கில் அசத்தல் வெற்றியை பெற்ற இந்தியா, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் இசாரோ ப்ரச்யா- ஜோன்ஸ் மேக்சிமஸ் பரபோல் ஜோடி, இந்தியாவின் சாகேத் மைனேனி மற்றும் ராமநாதன் ராம்குமார் ஜோடியை எதிர்கொள்கிறது. முன்னதாக மற்றொரு  அரையிறுதி போட்டியில் சீனாவை 6-4, 7-6 (5)என்ற செட் கணக்கில் வென்று இசாரோ ப்ரச்யா- ஜோன்ஸ் மேக்சிமஸ் பரபோல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தங்க பதக்கத்திற்கான போட்டியில் நாளை தாய்லாந்தும் இந்தியாவும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்கம் என இரண்டில் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

 

 

Share this story