ஆசிய விளையாட்டு போட்டிகள் : பதக்கப்பட்டியலில் இந்தியா 6-வது இடம்..
Sep 25, 2023, 18:59 IST
By

ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி இதுவரை 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய ஆண்கள் அணியும், மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது.
துடுப்பு படகுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது, துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் தோமர் ஒரு வெண்கலமும், 25 மீட்டர் பயர் பிஸ்டல் இந்திய ஆண்கள் அணி ஒரு வெண்கலம் என 2 வெண்கலம் வென்றது.
இதன்மூலம் இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 5வது இடம் பிடித்துள்ளது.