ஆசிய விளையாட்டு போட்டிகள் : இதுவரை இந்தியா வென்ற பதக்கங்கள்..

* 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
* ஆசிய விளையாட்டில் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் செஸ் போட்டியில் ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா இடம்பெறுகிறார்.
* வுஷூ பெண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்தியா - வியட்நாம் மோதின. இப்போட்டியில் வியட்நாம் வீராங்கனையை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி அபாரமாக வெற்றி பெற்றார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய வீராங்கனை தேவி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இந்திய வீராங்கனை தேவி தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
* டென்னிஸ் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 3 போட்டி 8ல் இந்தியா - ஜப்பான் மோதின. இப்போட்டியில் ஜப்பானை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா கஜகஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.