ஆசிய விளையாட்டு போட்டியில், 3-வது தங்கம் வென்றது இந்தியா..

ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு தொடரின் பாய்மர படகுப் போட்டியில் மகளிர் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
11 ரேஸ்களில் 27 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தை இந்தியா வென்றது. இதன்மூலம் இந்தியா வாங்கிய பதக்கங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அணி இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
பதக்கப் பட்டியல் விவரம் வருமாறு: சீனா ( 40 தங்கம், 21 வெள்ளி, 9 வெண்கலம்) - 70 பதக்கங்கள், தென் கொரியா (11 தங்கம், 10 வெள்ளி, 15 வெண்கலம்) - 36 பதக்கங்கள், ஜப்பான் (5 தங்கம், 14 வெள்ளி, 12 வெண்கலம்) - 21 பதக்கங்கள்,
உஸ்பெஸ்கிஸ்தான் 4 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) - 15 பதக்கங்கள், ஹாங்காங் ( 3 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம்) - 14 பதக்கங்கள், இந்தியா (3 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம்) - 13 பதக்கங்கள்.