பேட்மிண்டன் களம் : சாம்பியன் பட்டம் வென்றார் அக்சல்சென்..

* ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடந்தது. இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென், இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.
இதில் அக்சல்சென் 21-7, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
* 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, புனே, லக்னோ, புனே ஆகிய 10 மைதானங்களில் 48 போட் டிகள் நடக்கிறது. கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களில் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) குழு ஆய்வு செய்து வருகிறது.