பேட்மிண்டன் 'கெத்து' : மேலும் முந்தினார் நம்ம சிந்து

Badminton 'Kettu' Our Indus is ahead

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், தென் கொரிய வீரரிடம் நேர் செட்டில் தோற்று இந்தியாவின் லக்‌ஷயா சென் வெளியேறினார்.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில், உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து  தாய்லாந்தின் பூசனனை எதிர்கொண்டார். 

இந்த ஆட்டத்தில், பி.வி.சிந்து 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் பூசனனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்த தொடரில், இந்திய தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story