பேட்டிங், பவுலிங் சொதப்பல் : விராட்கோலி ஒப்புதல்

By 
Batting, Bowling Disorders Virat Kohli Approval

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பு வெகுவாக மங்கிவிட்டது. 

அதற்காக, இந்தியாவுக்கு வாய்ப்பு முழுமையாக முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

மும்முனைப் போட்டி :

குரூப்-2-ல் பாகிஸ்தான் அணி அரைஇறுதியை எட்டுவது கிட்டத்தட்ட உறுதி. மற்றொரு அரைஇறுதி இடத்தை பிடிக்க மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை, இனி எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளை அதிக வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். 

இதேபோல் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். 

இவ்வாறு முடிவுகள் எல்லாம் சாதகமாக அமைந்தால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 வெற்றி, 2 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். 

அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். இந்த வகையில் மட்டுமே இந்தியாவுக்கு அரைஇறுதி கதவு திறக்க வாய்ப்புண்டு.

தைரியமின்மை :

தோல்வி குறித்து, விராட்கோலி கூறுகையில், ' பேட்டிங், பந்து வீச்சில் நாங்கள் தைரியமாக செயல்படவில்லை. நியூசிலாந்து அணியினர் திறமையாக செயல்பட்டனர் ' என்றார்.

Share this story