இதெப்டி இருக்கு..ஒரு ரன் வித்யாசத்துல, தென்ஆப்பிரிக்கா தடாலடி வெற்றி..

Be it so..in a run difference, South Africa won the toss ..

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான 20 ஓவர் போட்டியில், தென்னாப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்க இடையே ஐந்து  20 ஓவர் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில், 3-வது போட்டி  கிரேனடாவில் நடைபெற்றது.  

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக குயின்டன் டி காக் 72 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களைக் குவித்தது.

இருபதாவது ஓவரில், வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதிப் பந்தில் அலன் சிக்சர் அடித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி 166 ரன்களே எடுத்து, ஒரு ரன்னில் தோற்றது.

இந்த வெற்றியின் மூலம், 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற  கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Share this story