'சிறந்த வீரர்' அஜாஸ் படேல் : ஐசிசி தேர்வு

'Best Player' Ajaz Patel ICC Selection

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. 

அதன்படி, டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் மயங்க் அகர்வால், நியூசிலாந்தின் அஜாஸ் படேல் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்தின் அஜாஸ் படேல் டிசம்பர் 2021 மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பரில், வான்கடேயில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அஜாஸ் படேல் சரித்திரம் படைத்தார். 

ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு, டெஸ்டில் அந்த சாதனையை எட்டிய 3-வது வீரர் ஆனார்.

இந்தியாவின் மயங்க் அகர்வால் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். 

2 போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், 2 அரை சதமும் அடங்கும்.

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.
*

Share this story