டோனியால், 3 மில்லியன் டவுன்லோடு.. ட்ரெண்ட் ஆன கேம் : வைரல் நிகழ்வு.. 

By 
candy

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனியின் வீடியோ ஒன்று வைரலானது.

அதில் அவர் விமானத்தில் பயணம் செய்தபோது அந்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த ஒருவர் டோனிக்கு பரிசு கொடுப்பது போன்று இருந்தது. இந்த வீடியோ நேற்றில் இருந்து வைரலானது. அந்த வீடியோவில் டோனி, கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

இதனால் டுவிட்டரில் கேண்டி க்ரஷ் கேம் இன்று காலையில் இருந்து டிரெண்ட் ஆனது. இந்நிலையில் 3 மணி நேரத்தில் 3 மில்லியன் வரை இந்த கேம் டவுன்லோட் ஆனதாக தகவல் வெளியானது. கேண்டி க்ரஷ் கேம் என்ற பெயரிலான டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியான அந்த தகவலில், டோனிக்கு நன்றி தெரிவிக்கபட்டிருந்தது.

ஆனால் அந்த டுவிட்டர் கணக்கு கேண்டி கிரஷ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்குதானா? என்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே, கேண்டி க்ரஷ் அந்த அளவுக்கு டவுன்லோடு ஆனதா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனினும், டோனியின் பெயருடன் இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

 

Share this story