காரின் நம்பர் பிளேட் வேற லெவல் : வைரலாகும் டோனி-பாண்ட்யா புகைப்படம்..

 

By 
pandya2

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் லீக் ஆட்டங்கள் முடிந்தன.

இதன் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

ஐ.பி.எல். போட்டியில் இன்னும் 4 ஆட்டங்களே இருக்கிறது. ஒருநாள் ஓய்வுக்கு பிறகு குவாலிபையர் சுற்று இன்று நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும், தோற்கும் அணி லக்னோ-மும்பை இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் (குவாலிபையர்-2) மோதும். இந்நிலையில் குரு சிஷ்யன் காம்போவிற்கு நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? என சிஎஸ்கே அணி டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.  

அந்த புகைப்படத்தில் ஒரு காரில் டோனி மற்றும் பாண்ட்யா இருக்கிறார்கள். நம்பர் பிளேட்டில் 07vs33 என இருந்தது. 7 என்பது டோனியின் ஜெர்சி நம்பர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 33 ஹர்திக் பாண்ட்யா ஜெர்சி நம்பராகும். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நான் எப்போதுமே டோனியின் ரசிகன் என ஹர்திக் பாண்ட்யா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story