சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டி : மான்செஸ்டர் அணி இன்று மிரட்டல் வெற்றி

By 
Champions League Football Manchester United won by a landslide today

சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது.

சாம்பியன் லீக் கால்பந்து  இன்று   நடைபெற்ற  ஆட்டத்தில்,  மான்செஸ்டர் சிட்டி - (பிஎஸ்ஜி)  பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 50-வது நிமிடத்தில், பி.எஸ்.ஜி அணியின் கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார் . பி.எஸ்.ஜி  அணி 1-0 என்று முன்னிலையில் இருந்தது .

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மான்செஸ்டர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் 63 -வது  நிமிடத்திலும், கேப்ரியல் ஜீசஸ் 76-வது  நிமிடத்திலும் கோல் அடித்தனர் .

இதனால், மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Share this story