சாம்பியன்ஸ் டிராபி போட்டி : பாகிஸ்தான் சென்று, இந்தியா விளையாடுமா?

By 
Champions Trophy Will India go to Pakistan and play

பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இந்தியா பங்கேற்குமா? என்பது தொடர்பாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது : 

கடந்த காலங்களில், பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்வதில் இருந்து விலகி இருந்தன. 

இது, அனைவருக்கும் தெரியும். அங்கு விளையாடும்போது வீரர்கள் தாக்கப்பட்டனர். இது ஒரு பெரிய பிரச்சினையாகும்.

உள்துறை அமைச்சகம் :

சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் போது, பல்வேறு வி‌ஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். 

நேரம் வரும்போது, என்ன செய்வது என்று பார்ப்போம். பாதுகாப்பு நிலைமையை அப்போது மதிப்பீடு செய்து முடிவு செய்வோம்.

பாகிஸ்தான் செல்வது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும்' என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நேரடி போட்டி தொடர் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை நடைபெறவில்லை. 

ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ளன.

விலகல் :

2009-ம் ஆண்டு லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால், பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் நடத்த முடியவில்லை.

சமீபத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் பயணத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகின என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story