வெள்ளிப்பதக்கம் வென்றார் சென்னை சிறுமி : என்ன போட்டியில் தெரியுமா? 

By 
wte

39-வது சப்ஜூனியர் மற்றும் 49-வது ஜூனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர்போலோ போட்டிகள் தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் குள வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

குரூப் 3 சிறுமியருக்கான 1 மீ. ஸ்பிரிங் போர்டு டைவிங் போட்டியில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை ஆர். ஆராதனா 140.80 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பிரிவில் மத்திய பிரதேச வீராங்கனை அனன்யா யாதவ் 150.55 புள்ளிகள் பெற்று தங்கத்தை தட்டிச்சென்றார்.

சிறுவர்கள் பிரிவில் ஆருஷ் ரகுவன்ஷி (மத்திய பிரதேசம், 192.25 புள்ளிகள்) முதலிடம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்ரேயாஷ் சக்பால் (191.85 புள்ளி) 2வது இடமும், ரன்வீர் காடே (178 புள்ளிகள்) 3வது இடமும் பிடித்தனர்.

பிளாட்பார்ம் டைவிங்கில் குரூப் 2 சிறுவரில் சுப்ரதீப் சாஹாவும்(சர்வீசஸ்), சிறுமியர் பிரிவில் ஷரவானி சூர்யவன்ஷியும்(மகாராஷ்டிரா) தங்கம் வென்றனர்.



 

Share this story