'சென்னை அணி ஜெயிக்கணும்' : டோனி மகள் பிரார்த்தனை..வைரலானது பதிவு..

'Chennai team will win' Tony's daughter prays..Viral record ..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. 

திரில் வெற்றி :

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

முன்னதாக, ஆட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனியின் மகள் ஜிவா கைகூப்பி, பிரார்த்தனை செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

கண்கள் மூடி பிரார்த்தனை :

5 வயதே ஆகும் ஜிவா, தனது தந்தையின் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, விரல் நகங்களைக் கடித்து பரபரப்புடன் காணப்பட்டார். 

கண்களை மூடி, கைகூப்பி பிரார்த்தனையும் செய்தார். 

அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் தான், வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
*

Share this story