சென்னை-ராஜஸ்தான் மோதல் : இன்று, வெறித்து ஓடுவது யார்? வெளுத்து வாங்குவது யார்?

By 
Chennai-Rajasthan clash Today, who is staring Who buys bleach

சென்னை சூப்பர் கிங்ஸ் 11 போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. 

டோனி-பிராவோ :

கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது. சாம் கர்ரனுக்குப் பதிலாக ஹேசில்வுட்டை டோனி தேர்வு செய்து விளையாடி வருவது ரசிகர்களுக்கு சற்று விந்தையாக இருந்தது. ஆனால், போட்டியில் தன்மீது டோனி வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றினார் ஹேசில்வுட்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அதிரடி வீரர் ஜேசன் ராயை 2 ரன்னில் வெளியேற்றியதுடன் அபிஷேக் சர்மா (18), அப்துல் சமாத் (18) ஆகியோரை வீழ்த்தி மிடில் ஆர்டர் பேட்டிங்கை சீர்குழைத்தார். 

பிராவோவை பற்றி சொல்லவே வேண்டும்.  கேன் வில்லியம்சன் (11), பிரியம் கார்க் (7) ஆகியோரை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 134 ரன்னில் கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தார்.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் களம் இறங்கி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 75 ரன்கள் குவித்து, நெருக்கடியை குறைத்தது.

ருதுராஜ்-டு பிளிசிஸ் :

இருந்தாலும் ருதுராஜ் (45), டு பிளிஸ்சிஸ் (41) ஆட்டமிழந்ததும் சென்னைக்கு லேசான சறுக்கல் ஏற்பட்டது. மொயீன் அலி 17 ரன்னில் ஆட்டமிழக்க, ரெய்னா 2 ரன்னில் வெளியேறினார்.

இதுவரை ஜொலிக்காத கேப்டன் எம்.எஸ். டோனி சிறப்பாக விளையாடினார். அம்பதி ராயுடு அவரது ஸ்டைலில் விளையாட, தல டோனி சிக்சர் அடித்து இலக்கை எட்ட சென்னை அணி  2 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

பீல்டிங், பேட்டிங், பந்து வீச்சு என மூன்று துறைகளிலும் சி.எஸ்.கே. அசத்தி வருகிறது. ஹேசில்வுட் விக்கெட் வீழ்த்தியிருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலம். 

ரெய்னா மட்டும் இன்னும் பாஃர்முக்கு வரவில்லை. அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், காட்டாற்று வெள்ளம்போல் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்படுத்துவது கஷ்டமாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசியாக ஆர்.சி.பி. அணியை எதிர்கொண்டது. 

தொடக்க வீரர் லீவிஸ் (37 பந்தில் 58 ரன்), ஜெய்ஸ்வால் (22 பந்தில் 31 ரன்) சிறப்பான தொடக்கம் கொடுத்த போதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் காரணமாக 150 ரன்களுக்கு உள்ளாகவே அடிக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. 

அதன்பின், 9 ஓவர்களில் 49 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது பரிதாபமே.

ராஜஸ்தான் அணி :

பந்து வீச்சில் முஸ்டாபிஜூர் ரஹ்மான், சேதன் சகாரியா, ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 

ஆனால், அவர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் மற்ற பந்து வீச்சாளர்கள் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனம். குறிப்பாக தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. பேட்டிங்கே நம்பியே அணி உள்ளது.

மொத்தத்தில், ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக வீறுகொண்டு விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ராஜஸ்தான் ராயல் அணியால் ஈடுகொடுக்க முடியுமா? என்பது சந்தேகமே.

அபுதாபியில் இதுவரை ஐந்து போட்டிகள் நடந்துள்ளன. இதில், நான்குமுறை சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.
*

Share this story