சேப்பாக்கத்தில் சம்பவம்: அஸ்வின் மேல அவ்ளோ பயமா? பதற்றத்தில் வார்னர்..   

By 
var4

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன உலகக்கோப்பை போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த மூன்று ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின். அஸ்வின் பந்துவீச்சை சமாளிப்பது டேவிட் வார்னருக்கு கடினமான காரியம். பலமுறை அஸ்வின் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட அஸ்வின் பந்துவீச்சை அடித்து ஆட வேண்டி வலது கையில் பேட்டிங் செய்தார் டேவிட் வார்னர். ஆனால், அஸ்வின் பந்தில் விக்கெட்டை இழந்தார். பொதுவாக வலது கை ஸ்பின்னர்கள் பந்துவீச்சில் இடது கை பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். இங்கேயும் அதே விஷயம் தான் வார்னருக்கு பிரச்சனையாக உள்ளது.

வலது கை ஸ்பின்னரான அஸ்வின் பந்துவீச்சு வார்னருக்கு தலைவலியாக உள்ளது. இந்த நிலையில், உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ரன் குவிக்க வேண்டும் என்றால் அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க வேண்டும். அதற்காக, சேப்பாக்கத்தில் பயிற்சியின் போது வார்னர் ஒரு வேலையை செய்து இருக்கிறார். சென்னையை சேர்ந்த ஸ்பின்னர்களை அழைத்து வலை பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர்களின் பந்துவீச்சில் அடித்து ஆட முயன்று இருக்கிறார்.

சில ரிவர்ஸ் ஸ்வீப்களை சரியாக செய்த அவர் ஒரு பந்தில் பவுல்டு அவுட் ஆனார். வார்னர் ஸ்பின் பந்துகளில் தடுமாறுவது அங்கேயே வெளிப்படையாக தெரிந்தது. அடுத்து மற்றொரு துவக்க வீரரான மிட்செல் மார்ஷ்-ம் ஸ்பின்னர்களை சந்தித்துள்ளார். அவரும் தடுமாறித் தான் ஆடி இருக்கிறார். டேவிட் வார்னர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் பலவீனத்தை உணர்ந்து இருப்பதால், எப்படியும் ஒரு திட்டதோடு தான் களமிறங்குவார்கள்.

ஆஸ்திரேலியா சாதாரண அணியும் அல்ல. அதனால், இந்திய அணியும் கவனமாக இருக்க வேண்டும். தப்பிக்கவே முடியாது.. அந்த துருப்புச்சீட்டு வீரரை களமிறக்கும் ரோஹித்.. ஆஸ்திரேலியாவுக்கு செக் இந்திய அணி அஸ்வின் மட்டுமின்றி ஸ்பின்னர்கள் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவை வைத்து ஆஸ்திரேலியாவை மடக்க முயற்சி செய்து வருகிறது. ஆஸ்திரேலியா என்ன செய்யப் போகிறது?
 

Share this story