செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சாதனை..

By 
vai1
இங்கிலாந்தில் ஐல் ஆஃப் மேனில் FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கை வைஷாலி ரமேஷ் பாபு மற்றும் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை மோதினர். 

இந்தப் போட்டியானது 8.5/11 என்ற புள்ளியுடன் டிராவில் முடிந்தது. மேலும், 25,000 டாலரையும் (ரூ.20 லட்சம்) பரிசாக வென்றார். சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்த பகு செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2ஆவது இடம் பிடித்தார்.

இந்த நிலையில் தற்போது பிரிட்டனில் நடந்த செஸ் போட்டியில் அவரது சகோதரி டைட்டில் வென்றுள்ளார். இதன் மூலமாக வரும் 2024 ஆம் ஆண்டு கனடாவில் நடக்க இருக்கும் செஸ் கேன்டிட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னதாக அவரது சகோதரன் பிரக்ஞானந்தா தேர்வாகியிருந்தார். 

இதே போன்று ஆண்களுக்கான பிரிவில் செஸ் கிராண்ட்மாஸ்ட்ர் அலெக்ஸாண்டர் பிரெட்கேவை தோற்கடித்து இந்தியாவின் விதித் குஜராத்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், இவர் வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் செஸ் கேன்டிட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்.

Share this story