வர்லாம் வரலாம் வா : ரோகித் சர்மா-இயான் மோர்கன், இன்றைய ஐபிஎல் அதிரடி..

By 
Come on come on Rohit Sharma-Ian Morgan, today's IPL action ..

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்றிரவு (வியாழக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. 

இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள மும்பை அணி 4 வெற்றி, 4 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. 

2-வது கட்ட சீசனில் மும்பை அணி, தனது தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ரோகித்-பொல்லார்ட் :

அந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இருவரும் ஆடவில்லை. 

அவர்கள் லேசான காயங்களால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இன்றைய ஆட்டத்திலும் அவர்கள் ஆடுவது சந்தேகம் தான். 

இது குறித்து, மும்பை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட்  அளித்த பேட்டியில் ‘ரோகித்தும், ஹர்திக் பாண்ட்யாவும் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். 

ஆனால், ஆட்டத்துக்கான அணித் தேர்வுக்கு அவர்கள் தயாராக இருப்பார்களா? என்பது குறித்து, என்னால் உறுதியாக சொல்ல முடியாது. 

இருப்பினும், நாள்தோறும் அவர்களது உடல்தகுதியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டார். 

ரோகித் சர்மா உடல்தகுதியை எட்டாவிட்டால், பொல்லார்ட் அணியை வழிநடத்துவார்.

மிரட்டல் :

இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. 

முந்தைய ஆட்டத்தில் சுழல் ஜாலத்தால் பெங்களூருவை வெறும் 92 ரன்னில் சுருட்டிய கொல்கத்தா அணி, அதே உத்வேகத்துடன் மும்பையையும் மிரட்ட காத்திருக்கிறது. 

சுப்மான் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, ஆந்த்ரே ரஸ்செல் என்று நட்சத்திர பட்டாளங்களை கொண்டுள்ள கொல்கத்தா அணி, மும்பைக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

மும்பைக்கு எதிராக கடைசியாக மோதிய 13 ஆட்டங்களில், 12-ல் தோற்றுள்ள கொல்கத்தா அணி அந்த தோல்விப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பார்க்கலாம். 

இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
*

Share this story