ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு, பிரதமர் வாழ்த்துச் செய்தி

By 
Congratulations from the Prime Minister to the Indian athletes participating in the Olympics

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. 

கேப்டன் :

இந்த போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் யார்? என்பது குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீரர் மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள வீரர்கள் பிரேந்திர லக்ரா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஹாக்கி இந்தியா அமைப்பு  அறிவித்தது.

வாழ்த்து :

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது.

இன்னும் சில வாரங்களில், டோக்கியோ 2021 ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தொடங்குகிறது. நமது குழுவினருக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

Share this story