கிரிக்கெட் தர்பார்: புள்ளிப் பட்டியலில் 2வது இடம்-எந்த அணி தெரியுமா?

By 
rank1

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மிக அபாரமாக விளையாடி  149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த அபார வெற்றி காரணமாக 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இந்தியாவை அடுத்து இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டி காக் மிக அபாரமாக விளையாடி 174 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து 383 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியின் முகமதுல்லா அபாரமாக விளையாடி சதம் அடித்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 46.4 ஓவர்களில் 233 ரன்களுக்கு அவுட் ஆகினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story