கிரிக்கெட் தர்பார்: சச்சினின் மற்றொரு சாதனையை முறியடித்தார் விராட்கோலி..

By 
rdrd

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயா உலக கோப்பை போட்டி பரபரப்பாக நடந்த நிலையில் இந்திய அணி கோலி மற்றும் ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்காக தனது மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒன்றை விளையாடினார் விராட் கோலி. இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது நிதானமாக விளையாடி 85 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் ஐசிசி நடத்தும் தொடர்களில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி தனது 67வது போட்டியில் 2,720 ரன்களை கடந்தார்.

இதற்கு முன்பாக சச்சின், 61 போட்டிகளில் 2,719 ரன்கள் குவித்ததே சாதனையையாக இருந்தது. இரண்டு சதங்கள் மற்றும் 25 அரை சதங்கள் உட்பட 65.23 என்ற சராசரியுடன் கோலி இந்த சாதனையை நிகழ்த்தினார்., சச்சின் டெண்டுல்கர் ஒயிட்-பால் ஐசிசி போட்டிகளில் ஏழு சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 52.28 சராசரியில் ரன்களைக் குவித்துள்ளார்.

Share this story