கிரிக்கெட் குடும்பம் : விராட்கோலி பிறந்த நாள்- கங்குலி உற்சாக ஏற்பாடு..

By 
vivi1

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்கள் என்றால் அந்தப் பட்டியலில் கங்குலியும், விராட் கோலியும் நிச்சயம் இடம் பிடிப்பார்கள். இந்த நிலையில் கங்குலி பிசிசிஐ யின் தலைவராக இருந்தபோது விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், கங்குலிக்கும் விராட்கோலிக்கும் பிரச்சனை இருப்பதாக பலரும் நம்பினர். மேலும் கோலியின் ரசிகர்கள் கங்குலியை ஒரு வில்லன் போல் சித்தரித்து அவருக்கு எதிராக வசைப்பாடினர்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கங்குலியும் விராட்கோலியும் கைகுலுக்காமல் சென்றது இவர்களுக்கு இடையே இருந்த பிரச்சனையை உறுதி செய்தது. எனினும் அதே சீசனில் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தின்போது கங்குலியும் விராட்கோலியும் கைகுலுக்கி கொண்டு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து கொண்டனர்.

இதன் மூலம்,  இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. மேலும் விராட் கோலி குறித்து கங்குலி அவ்வப்போது பாராட்டி பேசுவதும் உண்டு. 

இந்த நிலையில் வரும் ஐந்தாம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

உலகின் சிறந்த கேப்டன் - நம்பர் 1 இடத்தை பிடித்த ரோஹித் சர்மா.. தோனி, கோலி, பாண்டிங்கை முந்தி அதிரடிஉலகின் சிறந்த கேப்டன் - நம்பர் 1 இடத்தை பிடித்த ரோஹித் சர்மா.. தோனி, கோலி, பாண்டிங்கை முந்தி அதிரடி

விராட்கோலியின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி வருவதால், கோலியின் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருக்கிறது. பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலியின் அண்ணன் ஸ்னேஹசிஸ் கங்குலி தான் இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டத்தை 70 ஆயிரம் ரசிகர்கள் பார்க்க வருவார்கள்.

அவர்கள் அனைவருக்கும் கோலியின் உருவம் பதித்த முகமூடியை வழங்க நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம். அன்று விராட் கோலி பேட்டிங் செய்ய வரும்போது, அவருடைய முகமூடியை ரசிகர்கள் அணிய அறிவிப்போம். 

மேலும், அன்றைய நாளில் கேக் வெட்டி விராட் கோலிக்கு பிறந்த நாளை கொண்டாட நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம். இதற்கு ஐசிசி அனுமதி அளித்தால் விராட் கோலியின் பிறந்த நாளை பிரம்மாண்டமாகக் கொண்டாட நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார். 

விராட்கோலியின் பிறந்த நாளை, கங்குலியின் குடும்பம் உலகக்கோப்பை தொடரின் போது கொண்டாட இருப்பது கோலியின் ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது.
 

Share this story