கிரிக்கெட் பரபரப்பு: நான் 2 நிமிடத்திற்குள் வந்துவிட்டேன்..வீடியோ ஆதாரத்தை பதிவிட்ட ஏஞ்சலோ மேத்யூஸ்..

By 
mm90

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 38ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக இலங்கை அணி 3ஆவது அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் முக்கியமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக டைம் முறை நிகழ்வு நடந்துள்ளது. இதில், இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் சிக்கியுள்ளார்.

இதில், இலங்கை 24.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 135 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால், அவர் 2 நிமிடத்திற்குள்ளாக களத்திற்கு வரவில்லை என்று கூறி டைம் முறையில் வங்கதேச வீரர்கள் அப்பீல் செய்யவே நடுவர்களும் அவுட் கொடுத்துள்ளனர். எனினும் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் மேத்யூஸ் முறையிட்டார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை.

மூன்றாம் நடுவர்கள் வீடியோ மூலமாக பரிசோதனை செய்ததில் 2 நிமிடத்திற்குள் வரவில்லை என்று கூறி மேத்யூஸிற்கு அவுட் கொடுத்தனர். இந்த நிலையில், தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு நடுவர் தவறு செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறியிருப்பதாவது:

2 நிமிடங்கள் முடிவதற்குள்ளாக களத்திற்கு வந்ததாகவும், 5 வினாடிகள் எஞ்சிய நிலையில் உள்ள வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் சுட்டி காட்டியுள்ளார்.

மேலும், தனது 15 ஆண்டுகாக கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு எதிரணி இந்த அளவிற்கு நடந்து கொண்டதை தான் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். அதோடு, வங்கதேச அணி மற்றும் ஷாகிப் அல் ஹசன் மீது இருந்த மரியாதை அனைத்தும் தற்போதும் போய்விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். கிரிக்கெட்டை மதிக்காத எதிராணியை, விதிகளை மதிக்காத அணியுடன் கை குழுக்க தேவையில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Share this story