முதல் முறையாக கிரிக்கெட் சாதனை : நியூசிலாந்தை, வங்காளதேசம் வீழ்த்தியது எப்படி?

By 
Cricket record for the first time How did New Zealand beat Bangladesh

டாக்காவில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்தை 60 ரன்னில் சுருட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது வங்காளதேசம். 

நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக, வங்காளதேசம் சென்றுள்ளது. 

பேட்டிங் :

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. 

வங்காளதேச அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், நியூசிலாந்து 60 ரன்னில் சுருண்டது. அந்த அணியால் 16.5 ஓவரே தாக்குப்பிடிக்க முடிந்தது. லாதம், ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை கடந்தனர்.

வங்காளதேசம் அணி சார்பில், முஷ்டாபிஜூர் ரஹ்மான் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். 

நசும் அகமது, ஷாகிப் அல் ஹசன், சாய்புதின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

முதல் சாதனை :

பின்னர், 61 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அந்த அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வங்காளதேசம் சாதனை டைத்துள்ளது.

Share this story