கிரிக்கெட் டுடே: மந்திரம் போட்ட ஹர்திக் பாண்டியா; கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

By 
pan3

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மிகவும் முக்கியமான போட்டியான உலகக் கோப்பையின் 12ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். முதல் 2 போட்டிகளில் டெங்கு பாதிப்பால் இடம் பெறாத சுப்மன் கில் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரை வீசிய பும்ரா பந்தில் அப்துல்லா ஒரு பவுண்டரி அடித்தார். 2ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் இமாம் உல் ஹக் 3 பவுண்டரிகள் விளாசினார். இப்படியே தொடர்ந்து இருவரும் பவுண்டரியாக விளாசினர்.

அதன் பிறகு சிராஜ் வீசிய 8ஆவது ஓவரில் அப்துல்லா ஷபீக் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் ஓவரில் 7 ரன்களும், 2ஆவது ஓவரில் 11 ரன்களும் கொடுத்தார். அதன் பிறகு பாண்டியா தனது 3ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் இமாம் 2ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார்.

அதன் பிறகு 3ஆவது பந்தை வீசுவதற்கு முன்னதாக, பாண்டியா கையில் பந்தை வைத்துக் கொண்டு மந்திரம் போட்டுள்ளார். அதன் பிறகு தான் பந்தை வீசியுள்ளார். அந்த பந்தில் இமாம் உல் ஹக் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது இமாம் உல் ஹக்கை பார்த்து பை – பை என்று சொல்லியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று சிராஜ் வீசிய 28ஆவது ஓவரில் பாபர் அசாம் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹர்திக் பாண்டியா 4 ஸ்டெப் பின்புறம் சென்றதால், கேட்சை கோட்டை விட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பந்து பவுண்டரியும் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story