கிரிக்கெட் டுடே : அஸ்வின், பும்ரா சாதனையை முறியடித்தார் பாண்ட்யா; எப்படி தெரியுமா?

By 
ase

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கேப்டனான பாண்ட்யா டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களில் பும்ராவுடன் இணைந்துள்ளார்.

பாண்ட்யா 89 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 95 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும் புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் 3-வது இடத்தை பாண்ட்யா பிடித்துள்ளனர். 4-வது இடத்தில் தமிழக வீரர் அஸ்வின் (72) உள்ளார். பும்ரா 70 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.


 


 

Share this story