கிரிக்கெட் டுடே: வலியோடு விளையாடும் கேப்டன்; காரணம் என்ன?

By 
ban1

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேச அணி விளையாடியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதலில் விளையாடி 245 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து 248 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் போது வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கண்டிப்பான முறையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணி 28 ரன்கள் வித்தயாசத்தில் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இந்தியாவிற்கு எதிராக விளையாடிய 4 போட்டிகளில் வங்கதேச அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒன்று. கடைசியாக நடந்த ஆசிய கோப்பையில் வங்கதேச அணி 6 ரன்களில் வெற்றி பெற்றது.

இன்று நடக்கும் உலகக் கோப்பை 17ஆவது லீக் போட்டியில் இந்தியாவை எப்படியும் வீழ்த்தியே ஆக வேண்டும் என்று ஷாகிப் அல் ஹசன் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இதன் மூலமாக உலகின் சிறந்த அணியாக கருதப்படும்  இந்தியாவை வீழ்த்தி விட்டோம் என்றும் பெருமையாக கூறிக் கொள்ளலாம் அல்லவா.

அதே போன்று இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணியை மட்டுமே வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியை தழுவியுள்ளது.

மேலும், இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தினால் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த அணியாக வங்கதேச அணி கருதப்படும். இது போன்ற காரணங்களால் இன்றைய போட்டியில் ஷாகிப் அல் ஹசன் விளையாட வேண்டும் என்று குறிக்கோளுடன் இருக்கிறார். ஆனால், அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

Share this story