உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி போட்டிகள் தொடங்கியது..

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கியது.. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர், இந்தியாவில் அக்.5ம் தேதி தொடங்கி, நவ.19 வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் களமிறங்குகின்றன.
உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில், இன்று முதல் 10 அணிகளும் தலா 2 பயிற்சி போட்டிகளில் மோத உள்ளன. இந்த போட்டிகள் கவுகாத்தி, திருவனந்தபுரம் மற்றும் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெறுகிறது. இன்று நடக்கும் 3 போட்டியில் வங்கதேசம் – இலங்கை, ஆப்கான் – தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
இந்திய அணி தனது 2 பயிற்சி ஆட்டத்தில் நாளை நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் (கவுகாத்தி), அக்.3ல் நெதர்லாந்தையும் (திருவனந்தபுரம்) சந்திக்கிறது.