கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், காவல் நிலையத்தில் புகார்..

By 
dk1

* இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். தற்போது வர்ணனையாளராகவும், ஐ.பி.எல்.-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை நீலாங்கரையை அடுத்த அக்கரையில் உள்ளது.

இந்நிலையில் அந்த வீட்டின் அசல் ஆவணங்களை நகலெடுக்க எடுத்து சென்றபோது தொலைந்துவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு தாயகம் திரும்பினார். இதனால் செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா- நேபாளம் இடையேயான போட்டியில் அவர் பங்குபெறவில்லை.

இந்நிலையில் குழந்தை பிறப்புக்கு பின்னர் இலங்கை திரும்பிய அவர், இன்று அணியுடன் இணைந்துள்ளார். இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் அவர் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.

 

Share this story