புஜாரா மீது விமர்சனம் : ரோகித் சர்மா பதிலடி
 

By 
Criticism on Pujara Rohit Sharma retaliates

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 78 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 432 ரன் குவித்தது. கேப்டன் ஜோ ரூட் 121 ரன்னும், டேவிட் மலான் 70 ரன்னும், ஹசிப் ஹமீது 68 ரன்னும் எடுத்தனர். 

முகமது ‌ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

விராட் கோலி்:

354 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3-வது நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 91 ரன்னும், கேப்டன் விராட் கோலி 45 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ராகுல் 8 ரன்னிலும், ரோகித் சர்மா 59 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

திறமையான பேட்ஸ்மேன் :

போட்டிக்கு பிறகு, புஜாரா மீது எழுந்த விமர்சங்களுக்கு, இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கூறியதாவது :

புஜாரா ஒரு திறமை வாய்ந்த பேட்ஸ்மேன். இதை அவர் எப்போதும் உணர்த்தி இருக்கிறார். சில நேரங்களில், நமது நினைவுகள் தான் அதை மறந்து விடுகின்றன.

சிறப்பு-மோசம் :

நானும், புஜாராவும் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினோம். புஜாரா அதில் சிறப்பாக செயல்பட்டார். 

அவருடைய திறமை, எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அவர் தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

முதல் இன்னிங்சில் எங்களது பேட்டிங், ஒட்டு மொத்தமாக மோசமாக அமைந்துவிட்டது. ஆட்டத்தில், இந்திய அணியின் ஜோடி நிலைத்து ஆடினால் நன்றாக இருக்கும்' என்றார்.

Share this story