ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து, சிஎஸ்கே வீரர் கான்வே வியப்பு..

By 
convy

16-வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின.

இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது என சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரர் கான்வே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை வீரர் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி இருக்க இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது.

தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story