கிரிக்கெட் வீராங்கனையை, திருமணம் செய்து கொண்டார் சிஎஸ்கே வீரர்..

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் இவர், தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ளார்.
சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். டோனியின் நம்பிக்கைக்குரிய ஒரு வீரராக திகழ்கிறார். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைத்தது.
7-ந்தேதி தொடங்கும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் பேக்அப் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் திருமணம் செய்ய இருப்பதால், கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டார். பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் நேற்று ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடைபெற்றது. உட்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். உட்கர்ஷா பவார் கிரிக்கெட் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
சி.எஸ்.கே. நட்சத்திர வீரர் திருமணம் செய்து கொண்டார்