ஜாம்பவான் ஜோகோவிச்சை அதிரடியாக வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார் டேனில்

By 
Dane won the championship, beating the legendary Djokovic

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரபரப்பான ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், ஜோகோவிச்சை வீழ்த்தி டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் மற்றும் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் விளையாடினர்.

ஆரம்பமே அதிரடி :

இந்த போட்டியில், யாரும் எதிர்பாராத விதமாக தொடக்கம் முதல், அதிரடியாக விளையாடினார்.

ஆட்டத்தில் மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  

இதனால், கடந்த 2005-ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நம்பிக்கை :

இது குறித்து டேனில் கூறுகையில், ' ஆட்டம் ரெம்ப த்ரிலிங்காக இருந்தது. மிகவும் கடினமான பயிற்சி எடுத்திருந்தேன். 

இந்த வெற்றி, மகிழ்ச்சியையும் மேலும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது' என்றார்.

Share this story