உறுதியும் பயமின்மையும் எப்போதும் வேண்டும் : விராட் கோலியின் வெற்றி ரகசியம்

Confidence and fearlessness are always needed The secret of Virat Kohli's success

ஐபிஎல் லீக்கில்,  நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

பிளே ஆஃப் :

இந்த வெற்றியின் மூலம் 11 ஆட்டங்களில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று ஏறக்குறைய பிளே-ஆஃப் சுற்றை உறுதிப்படுத்தியுள்ளது.

2-வது பகுதி தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆர்.சி.பி. அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளிலும் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டும் என்ற நிலையில் இருந்தது. அதன்பின் அவர்களால் 149 ரன்களே அடிக்க முடிந்தது.

பயமின்மை :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான வெற்றி குறித்து, விராட் கோலி கூறியதாவது :

' பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு, அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்று வலுவாக திரும்பியுள்ளோம். 

டி20 கிரிக்கெட்டில் நீங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவோம் என்று தன்னம்பிக்கை வைக்க முடியும் என்றால், சரியான திசையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம்.  நாங்கள் திரும்பி வந்து ஆதிக்கம் செலுத்துகிறோம்.

175 போட்டிக்கான ரன்களாக இருந்திருக்கும். இன்னும் பேட்டிங் செய்வதற்கு சிறந்த ஆடுகளமாக உள்ளது. 

பொறுமையாக இருந்தால் பேட்ஸ்மேன்கள் தவறு செய்து, விக்கெட்டுகளை இழப்பார்கள் என்று எங்களுக்குத் தெரிந்தது. அந்த வகையில்தான் நடந்தது. 

ஆனால், அவர்கள் தவறை நோக்கிச் சென்றார்கள். எவின் லீவிஸ் விக்கெட் திருப்புமுனை. கார்டன் முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசினார். 

சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார். உறுதி மற்றும் பயமின்மை ஆகியவற்றால், இந்த வெற்றியை பெற்றோம்’ என்றார்.
*

Share this story