தவான்-ஸ்ரேயாஷ் அதிரடி ஆட்டம் : ஐதராபாத்தை, டெல்லி வீழ்த்திய கள விவரம்..

Dhawan-Srayash Action Match Hyderabad, Delhi Field Details ..

ஐபிஎல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. 

இதில், டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. 

பேட்டிங் :

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, அந்த அணியின் டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

முதல் ஓவரை அன்ரிச் நோர்ஜே வீசினார். முதல் ஓவரிலேயே வார்னர் ரன்ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். 

தத்தளிப்பு :

அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்னிலும், சகா 18 ரன்னிலும், மணிஷ் பாண்டே 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

இதனால், 74 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் தத்தளித்தது.

அதன்பின் வந்த அப்துல் சமாத் 21 பந்தில் 28 ரன்களும், ரஷித் கான் 19 பந்தில் 21 ரன்களும் சேர்க்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. 

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் நோர்ஜே 2 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

டெல்லியின் ஆட்டம் :

பின்னர், 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் இறங்கியது. 

தொடக்க வீரர் பிரத்வி ஷா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் உடன் ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தவான் 37 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். 

அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் 10.5 ஓவரில் 72 ரன்கள் எடுத்திருந்தது. தவான்- ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது.

3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாசுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு, கடைசி ஐந்து ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது.

அதன்பின், ரிஷப் பண்ட்  அதிரிடியாக விளையாட 17.5 ஓவரில் டெல்லி அணி 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பண்ட் 21 பந்தில் 35 ரன்கள் எடுத்தும் ஷ்ரேயாஸ் 41 பந்தில் 47 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Share this story