வட்டு எறிதல் : இறுதிச்சுற்றை எட்டினார், இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர்..தங்கம் பெறுவாரா.?

By 
Discus throw Reached the final, Indian player Kamalpreet Kaur .. Will get gold.

தகுதிச்சுற்றில் 64 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிச்சுற்றில் பங்கேற்கும் 12 வீராங்கனைகளில் ஒருவராக இந்தியாவின் கமல்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இப்போட்டிகளை உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்போடு கவனித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான வட்டு எறிதல் தகுதிச்சுற்றில், இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் சிறப்பாக செயல்பட்டார். அவர், 64 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்து 2-வது இடம் பிடித்து அசத்தினார்.

66 மீட்டருக்கு மேல் வட்டு எறிந்தால், தானாகவே இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். இவர், 64 மீட்டர் தூரம் எறிந்து, முதல் 12 இடங்களுக்குள் நுழைந்து இறுதிச்சுற்று வாய்ப்பை பெற்றுள்ளார். 

மற்றொரு வீராங்கனை சீமா புனியா 60.57 மீட்டர் தூரம் வரை எறிந்தார்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில், இந்திய வீரர்கள் யாரும் தங்கப்பதக்கத்தை வெல்லவில்லை. இதனை வெல்லப்போவது யார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது

Share this story