எனது இலக்கு எது தெரியுமா? : ருதுராஜ் பேச்சு 

By 
rutu2

19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சமீபத்தில் அறிவித்தது.

உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடுவதால் 2-வது கட்ட வீரர்களே அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அணியின் கேப்டனாக சி.எஸ்.கே.வின் தொடக்க வீரரும், நம்பிக்கை நட்சத்திரமுமான ருதுராஜ் கெய்க் வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்குசிங், ஷிவம்துபே, ஜிதேஷ்சர்மா, வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஸ்கான், அர்தீப்சிங், முகேஷ்குமார், ஷிவம் மவி, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற்று உள்ளனர். யாஷ் தாக்கூர், சாய்கிஷோர், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, சாய் சுதர்ஷன் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆசிய விளையாட் டுப் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் தேசிய கீதம் அரங்கில் இசைக்கப்படுவதை உறுதி செய்வதே எனது நோக்கமாகும்.

எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சிறப்பானதாக கருதுகிறேன். ஆசிய விளையாட்டு போட்டியில் நாட்டிற்காக பதக்கம் வெல்வதில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகம் அளிக்கும். இந்தியாவுக்காக ஆடுவது உண்மையிலேயே பெருமையான உணர்வாகும். இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
 

Share this story