அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் நம்பர்-1 யார் தெரியுமா?

இந்தியா 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது. இதில், ஒவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 16 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்தியா விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்த நிலையில் தான் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 16ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 288 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் லாக்கி ஃபெர்குசன் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோரது பந்து வீச்சில் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில், லாக்கி ஃபெர்குசன் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக 2023 உலகக் கோப்பை போட்டியில் 11 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். மேலும், நேற்றைய போட்டியில் மேட் ஹென்றி ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக 9 விக்கெட்டுகள் கைப்பற்றி 2ஆவது இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகள் கைப்பற்றி 3ஆவது இடம் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் ஹசன் அலி 7 விக்கெட்டுகளுடன் 4ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா வீரர் கஜிசோ ரபாடா 7 விக்கெட்டுகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளனர்.