பாலியல் புகார் எதிரொலி; பாஜக அமைச்சர் ஸ்மிருதி ரானியை காணவில்லை : காங். போஸ்டருக்கு பதிலடி..

By 
smiriti3

டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டுள்ளது.

பா.ஜனதா எம்.பி.யும்,  இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டம்  தீவிரம் அடைந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் மீனாட்சி  லேகியிடம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கேள்வி கேட்க, அவர் தப்பி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தற்போது மத்திய பெண்கள், குழந்தைகள் நலன் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில், மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக ஸ்மிருதி இரானி, தாம் அமேதி தொகுதியில்தான் இருக்கிறேன் என்ற பதில் மட்டும் தராமல், முன்னாள் எம்பியை அமெரிக்காவில் தொடர்பு கொள்ளுங்கள் எனவும் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி இரானி.
 

Share this story