விசுவாசம்தான் முக்கியம், கடைசிவரை ஆர்சிபி.க்காக விளையாடுவேன் : கோலி ஃபீலிங்ஸ்

By 
Faith is important, I will play for RCB till the end Goalie Feelings

நடப்பு ஐபிஎல் தொடரில், தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடியதால், பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், தற்போது எலிமினேட்டரில் தோற்று வெளியேறி உள்ளது.

கேப்டன் பொறுப்பு :

இந்த ஐ.பி.எல். போட்டியோடு விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இனி வரும் ஐ.பி.எல். போட்டிகளில் அவர் கேப்டனாக பணியாற்ற மாட்டார்.

எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது. 

விசுவாசம் :

இந்நிலையில், விராட் கோலி கூறியதாவது; 'பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் நான் ஒரு வீரராக கடைசி வரை விளையாடுவேன். அந்த அணிக்காக விசுவாசமாக இருப்பேன். என்னை பொறுத்தவரை விசுவாசம் முக்கியமானது.

பெங்களூர் அணியில் விளையாடும் இளம் வீரர்கள் நம்பிக்கையுடனும், சுதந்திரமாகவும் விளையாடும் கலாச்சாரத்தை நான் உருவாக்க முயற்சித்துள்ளேன். 

இதேபோன்ற கலாச்சாரத்தைத்தான் நான் இந்திய அணியிலும் உருவாக்கி இருக்கிறேன்.

என்னால் முடிந்த அளவு சிறப்பாக அணிக்காக செய்திருக்கிறேன். இதற்கான எதிர்வினை பதில் எவ்வாறு இருக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால், ஆர்.சி.பி அணிக்காக 120 சதவீத உழைப்பை ஒவ்வொரு முறையும் வழங்கி இருக்கிறேன்.

அடுத்து ஒரு வீரராகவும் இதை நான் செய்வேன். அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் மறுசீரமைப்பதும், மறுகட்டமைப்பை உருவாக்குவதும் முக்கியமானது.

கடைசிவரை ஆர்சிபி :

நான் வேறு ஏதாவது அணியில் விளையாடுவேன் என்று கருதவில்லை. கடைசியாக ஆடும் வரை ஆர்.சி.பி. அணிக்காக விளையாடுவேன்.

மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியின் சுனில் நரீன், வருண், ‌ஷகிப் ஆகிய 3 சுழற்பந்து வீரர்களும் கட்டுக்கோப்பாக பந்து வீசி ஆதிக்கம் செலுத்தினர். நேர்த்தியாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் நடுப்பகுதிகளில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி வரை போராடினோம். பேட்டிங்கும் மோசமாக அமையவில்லை. ஒட்டுமொத்தமாக நாங்கள் அடுத்த சுற்றுக்கு செல்ல தகுதியானவர்கள்.

கடைசி ஓவர் வரை போராடியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுதான் எங்களது அணியின் அடையாளம். கிறிஸ்டியன் ஓவரில் 22 ரன்கள் கொடுத்தது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இரு ஓவர்களில், அதிகமான ரன்களை கொடுத்ததும் வெற்றி வாய்ப்பை பாதித்தது.

Share this story